Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் - நடிகர் பார்த்திபன்

Advertiesment
நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் - நடிகர் பார்த்திபன்
, சனி, 30 செப்டம்பர் 2023 (13:57 IST)
காவிரி விவகாரத்தில்  கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுப்பதுடன்,  தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் குரலெழுப்பிய சிவராஜ்குமார் மற்றும்  பிரகாஷ்ராஜ்க்கு நடிகர் பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘ஜெயிலர்’படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!! எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?

அவர்கள் ….

எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும்,அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது,அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது)
திருந்த வாய்ப்புள்ளது.

நீரின்றி அமையாது உலகு !-திருக்குறள் ‘’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோவுக்கு போட்டியாக தெலுங்கில் ரிலீஸாகும் பாலையாவின் பகவந்த் கேசரி!