Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தில்லுக்கு துட்டு2 முதல் நாள் வசூல் எவ்வளவு? சாதனை செய்த சந்தானம்

தில்லுக்கு துட்டு2 முதல் நாள் வசூல் எவ்வளவு? சாதனை செய்த சந்தானம்
, வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (12:46 IST)
நேற்று வெளியான சந்தானத்தின் தில்லுக்கு துட்டு2 முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம்பெற்ற சந்தானம் தற்போது கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' படம் நேற்று ரிலீசாகியது. 
 
இப்படத்தை  ராம் பாலா இயக்கி இருக்கிறார். ஷபீர் இசை அமைத்திருக்கிறார். படத்தில் ராமர், ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ரிலீசான பக்கமெல்லாம் மாபெரும் ரெஸ்பான்ஸ். அல்டிமேட் காமெடி, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டா சாமி என பலர் இப்படத்தை பாராட்டி தள்ளி வருகின்றனர்.
 
இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் ரூ 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளது, சென்னையில் சந்தானம் படத்தின் அதிக வசூலே இதுதானாம். முதல் நாள் தமிழக வசூலை விரைவில் வெளியிடுகிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரவ்வுடன் நட்பு இல்லை! முதன்முதலாக இருவரின் திருமணம் குறித்து மனம்திறந்த ஓவியா!