Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோ அவதாரம் கல்லா கட்டாததால் இயக்குனர் அவதாரமெடுத்த பிரபல காமெடி நடிகர்!

Advertiesment
ஹீரோ அவதாரம் கல்லா கட்டாததால் இயக்குனர் அவதாரமெடுத்த பிரபல காமெடி நடிகர்!
, சனி, 2 பிப்ரவரி 2019 (17:34 IST)
நடிகர் சந்தானம் காமெடி நடிகராக தனது சினிமா கெரியரை ஆரம்பித்து பிறகு ஹீரோ அவதாரம் எடுக்கிறேன் என்று படங்களில் நடித்தார். பின்னாளில் அதுவும் வேலைக்காததால் தற்போது இயக்குனர் ஆகப்போவதாக அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 


 
நடிகர் சந்தானம் நடிப்பில் திரில்லர் காமெடி பணியில் உருவாகியுள்ள தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளிவர உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது 
 
டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகர் சிம்பு தான் . இப்போது நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த இயக்குனராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு என்று கூறினார். 
 
அதற்கான முழுநேர வேலைகளில் இறங்கி எந்த மாதிரி பாணியில் படம் எடுப்பது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று தீர ஆராய்ந்து தரமான படத்தை நிச்சயம் தருவேன் என்றும் தெரிவித்தார்.  
 
ஆக எதிர்காலத்தில் நீங்கள் என்னை இயக்குனராக பார்க்கலாம். சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். அதுவும் ஆர்யாவை வைத்து தான் படம் இயக்கப்போகிறேன் என்றார் சந்தானம் 
 
காமெடியனை தொடர்ந்து ஹீரோவாக மக்கள் மனதில் இடப்பிடித்த சந்தானம், சிறந்த இயக்குனராகவும் வளர வாழ்த்துக்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமனாலும், எவனாலும் அழிக்க முடியாத சக்தி: வைரலாகும் விஜய்யின் போஸ்டர்