Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல திரைப்பட விமர்சகர் திடீர் மரணம்! – திரை பிரபலங்கள் அஞ்சலி!

Advertiesment
Kaushik LM
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (09:15 IST)
பிரபல தமிழ் திரைப்பட விமர்சகரான கௌசிக் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான திரை விமர்சகர்களின் முக்கியமானவராக இருந்தவர் கௌசிக். தனியார் யூட்யூப் சேனலில் விமர்சகராக பணியாற்றி வந்த இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் குறித்தும் நேர்மையான விமர்சனங்களை முன்வைத்து மக்களிடையேயும், திரை பிரபலங்களிடையேயும் நன் மதிப்பை பெற்றவர்.

நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசிக் திடீர் மரணம் கோலிவுட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, எஸ் ஜெ சூர்யா, நடிகர் ஹரிஷ் கல்யாண், தனுஷ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் கௌசிக்கிற்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
கௌசிக் இரங்கல் தொடர்பாக ட்விட்டரில் #RIPKaushikLM என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’… சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான டீசர்