சமந்தாவுக்காக சண்டை - ஒய் திஸ் கொலவெறி மதுரை?
சமந்தாவுக்காக சண்டை - ஒய் திஸ் கொலவெறி மதுரை?
மதுரை என்றால் எல்லாமே கொஞ்சம் அதிகம்தான். பாசம் கோபம் மட்டுமில்லை, கண்மூடித்தனமான சினிமா பைத்தியமும் இங்கு கொஞ்சம் அதிகம்.
வீ கேர் நிறுவனத்தின் 32 -வது கிளையை திறக்க சமந்தா மதுரை வந்தார். அவரைப் பார்க்க நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த சின்னதாக தடியடியும் நடத்த வேண்டியிருந்தது போலீசுக்கு.
எங்கே, விழா முடிந்ததும் சமந்தா காரில் கிளம்பிவிடுவாரோ என்று சில வெறிபிடித்த ரசிகர்கள் சமந்தா வந்த காரின் டயரை குத்திக் கிழித்து பஞ்சராக்கினர். கார் நகர்ந்தால்தானே சமந்தா போக முடியும்?
மதுரக்காரர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியலையே.