அஜித் படத்தில் மீண்டும் அனு வர்தன்
அஜித் படத்தில் மீண்டும் அனு வர்தன்
அஜித்தின் இப்போதைய தோற்றத்துக்கு பெரிதும் காரணமாக இருப்பது அவரது காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன்.
இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி.
பில்லா படத்தில் வரும் அஜித்தின் எக்ஸிக்யூடிவ் லுக்கிற்கு அனு வர்தனின் காஸ்ட்யூமும் ஒரு காரணம். அந்தப் படத்தில் அனு வர்தனின் வேலை பிடித்துப் போக, தொடர்ச்சியாக அவரை தனது படங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார் அஜித். சிவா இயக்கிய வீரம், வேதாளம் படங்களிலும் அனு வர்தன்தான் அஜித்தின் காஸ்ட்யூமர்.
சிவாவின் புதிய படத்திலும் அஜித்தின் காஸ்ட்யூமராக அனு வர்தனை நியமித்துள்ளனர். ஸ்டைலிஷான அஜித்திற்கு அனு வர்தன் உத்தரவாதம்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்