Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளை கொன்றுவிடும்படி மருத்துவர்களிடம் கெஞ்சிய தந்தை; நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

Advertiesment
மகளை கொன்றுவிடும்படி மருத்துவர்களிடம் கெஞ்சிய தந்தை; நடிகைக்கு நேர்ந்த கொடூரம்
, வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (12:02 IST)
உத்திரபிரதேசத்தை சேர்ந்த நடிகை ரூபாலி. இவர் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். தனது ஊருக்கு அருகாமையில் உள்ள நகரில் கடந்த 2013ல் கலை  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கே அவர் அஜய் புஜரி என்பவரை சந்திக்க, அவர் சில நாட்களில் தனது காதலை வெளிப்படுத்தியதோடு, தன்னை திருமணம்  செய்துகொள்ளுமாறு வற்புறுத்துயுள்ளார். ஆனால் ரூபாலி ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததால், புஜரியின் காதலை மறுத்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த புஜரி, அழகு இருப்பதால்தான் இத்தனை ஆணவம் என கூறி சென்றுள்ளார். ஒருநாள் திரைப்பட படப்பிடிப்பு முடித்து தமது அறையில்  வந்த ரூபாலிக்கு, தாம் அருந்திய உணவில் போதை மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இதில் அவர் ஆழ்ந்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு 2  மணியளவில் ரூமிற்கு வந்த புஜரி தாம் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை போர்வையை திறந்து ரூபாலியின் மீது வீசியுள்ளார். இதில் முகம் வெந்து, உடல்  முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட ரூபாலியை அவரது தோழிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
மருத்துவமனையில் ரூபாலி உயிருக்கு போராடிய நிலையில், அதை பார்க்க முடியாத அவரது தந்தை, தனது மகளை கொன்றுவிடும்படி மருத்துவர்களிடம்  கெஞ்சியுள்ளார். அதன் பின்னர் காயங்கள் குணமடைந்த நிலையில், புஜரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் போதிய ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில்  அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் ரூபாலி குல்திப் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான ரூபாலி லக்னோவில் உள்ள கொபி ஷாப்  என்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களால் சேர்ந்து நடத்தப்படுவதில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த அனிருத்