Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ஒரு நடிகைக்குக் கோவில்… அலப்பறை செய்யும் ரசிகர்கள்!

Advertiesment
மீண்டும் ஒரு நடிகைக்குக் கோவில்… அலப்பறை செய்யும் ரசிகர்கள்!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:18 IST)
நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோயில் கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இப்போது அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர்.

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர். அடுத்தபடியாக அவருக்கு கோயில் கட்ட உள்ளதாகவும், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ரசிகர்களின் இந்த முட்டாள் தனத்தை ஆதரிக்கும் விதமாக நிதி அகர்வால் ‘ரசிகர்களின் இந்த செயல் நான் எதிர்பார்க்காத ஒன்று. எனக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறந்த காதலர் தின பரிசு. ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்களின் அபரிமிதமான அன்பால் நான் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேச்சிலர்… வயது வந்தோருக்கான படமா? இயக்குனர் விளக்கம்!