Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ளூ சட்டை மாறனின் அதிரடி முடிவு! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

Advertiesment
ப்ளூ சட்டை மாறனின் அதிரடி முடிவு! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!
, வெள்ளி, 10 மே 2019 (11:44 IST)
தமிழ் சினிமா உலகில் யூடியூப் விமர்சனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெல்ல மெல்ல ஆரம்பித்து, ஊடக துறையில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அங்கமாக உருவாகிவிட்டது. லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை தெள்ளத்தெளிவாக விளக்கக்கூடிய பல்வேறு  யூடியூப் விமர்சகர்கள் இன்று உருவாகியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் தான் ப்ளூ சட்டை மாறன். தனி நபர்களாக சேனல் ஆரம்பித்து பிரபலமான இவரின் விமர்சனத்தை கேட்ட பிறகே தியேட்டருக்கு செல்பவர்கள் இங்கு ஏராளம்.


 
ப்ளூ சட்டை அணிந்து எதார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தி  மதுரை பேச்சு வழக்கில், இயல்பாக பேசும் இவரது ஸ்டைல் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நல்ல படங்களை கூட தவறாக விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கி படு பேமஸ் ஆகிவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால்,  மாறன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கபோவதாகவும் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் எனவும்  குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் தங்களது புகைப்படங்களை மின்னஞ்சல் செய்யலாம் என்றும் பிறகு மே 13 தேதி தங்களை நேரில் சந்திக்கலாம் என்றும் அறிவித்துள்ளார் . 

webdunia

 
மாறனின் இந்த புதிய பரிமாணத்தை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டினாலும் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் இயக்குனர் ஆகிவிட்டால் இனி விமர்சிப்பதற்கு முடக்கு போட்டு விடுவாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சுப்பராஜ் & விஜய் – இணையும் புது கூட்டணி !