Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பமான நிலையில் நிச்சயதார்த்தம்! வைரலாகும் ஏமி ஜாக்சனின் வீடியோ!

Advertiesment
கர்ப்பமான நிலையில்  நிச்சயதார்த்தம்! வைரலாகும் ஏமி ஜாக்சனின் வீடியோ!
, திங்கள், 6 மே 2019 (12:26 IST)
‘மதராச பட்டணம்’ என்ற தரமான படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் எமி ஜாக்சன்.  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவரது நடிப்பு  இந்தப் படத்தில் பலராலும் பேசப்பட்டது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்துவிட்டு தற்போது ஹாலிவுட் பக்கம் தாவியுள்ளார் ஏமி. 


 
இவர் பாலிவுட் படங்களில் நடித்த போது வாரிசு நடிகர் ஒருவருடன் காதலில் இருந்ததாக கிசு கிசுக்கள் பரவியது.  அதன்பிறகு தொழில் அதிபரான  ஜார்ஜ் பனயியோடோ என்பவை காதலித்துவந்தார். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் பெரும்பாலும் தனது தாய் நாடான லண்டனில்தான் தனது காதலருடன் அதிக நேரத்தை செலவழிப்பார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் ஏமி ஜாக்சன்.

webdunia

 
இந்நிலையில் நேற்று ஏமி ஜாக்சன், ஜார்ஜின் நிச்சயதார்த்தம் முறைப்படி லண்டனில் நடந்துள்ளது. நிச்சயதார்த்த பார்ட்டியை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர். அந்த பார்ட்டியில் ஏமி மிகவும் மகிழ்ச்சியோடு காதலருடன் நடனமாடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

webdunia
 
வருகிற அக்டோபர் மாதம் பிரசவம் நடக்கும் அதனை அடுத்து ஏமியும் ஜார்ஜும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்தநாள் அதுவுமா இப்படியா! ராய்லட்சுமியின் வீடியோவால் எத்தனை பேர் பயந்துட்டாங்க!