கொரியா நாட்டு பிரபல இளம் நடிகை பார்க் சூ ரியன் படிக்கட்டில் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.
தென்கொரியா நாட்டைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பார்க் சூ ரியன். இவருக்கு 29 வயது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டைனர் என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து, மிஸ்ற்றி டெஸ்டினி, பைண்டிங், சித்தார்த்தா உள்ளிட்ட பல கொரிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
அந்த நாட்டின் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஜெஜூ தீவிற்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பார்க் சூ ரியன் சென்றிருந்தார்.
அப்போது, அங்குள்ள மாடிப்படியில் தவறி விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டு, சுய நினைவை இழந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறினர்,.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பார்க் சூ ரியனின் பெற்றோர் அவர் இனி பிழைக்க மாட்டார் என்று கூறியதை அடுத்து, அவரது உடலை தானமாக அளிக்க முன்வந்துள்ளனர்.
இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் கூறி வருகின்றனர்.