அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் அதே நாளில் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உலகெங்கிலுமுள்ள ஹாலிவுட் பட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று அதிகரித்ததால் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது பாதியளவு ரசிகர்களுடன் தியேட்டர்கள் இயங்கிவருகின்றன.
இந்நிலையில் ஹாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ்,இந்த ஆண்டில் தனது பிரமாண்ட படங்களான நியூம்யூடண்ட்ஸ் கிரிஸ்டோபர் நோலனின் டொனெட் ஆகிய படங்கள் வெளியிட்டபோதிலும் அது போதிய வரவேற்ப்பைப் பெறவில்லை எனத் தெரிகிறது.
இந்தக் கொரோனா தொற்றும்கூட மக்கள் திரையரங்குகளுக்கு வராததற்கு காரணம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், அடுத்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ல வான் பிரதர்ஸ் வெளியிடும் வொண்டர் வுமன் 1984 என்ற திரைப்படம் கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வெளியிடும் அதேநாளில் ஓடிடி தளத்திலும் இப்படத்தை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இனிமேல் அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் இந்நிறுவனத்தின் அத்தனை படங்களும் அதே நாளில் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யப்படும்.