Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ட்விட்டரில் திடீரென டிரெண்ட் ஆகும் AK64.. பூஜா ஹெக்டே, நயன்தாரா ஹீரோயின்கள்.. இயக்குனர் யார்?

Advertiesment
அஜித்

Mahendran

, வியாழன், 29 மே 2025 (10:10 IST)
அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தான் தொடங்கும் என்று, அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில், தற்போது திடீரென ட்விட்டரில் "அஜித்தின் அடுத்த படமான ஏகே 64" ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அஜித் நடித்த "குட் பேட் அக்லி" படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான், இந்த படத்தை மீண்டும் இயக்க இருப்பதாகவும், மைத்ரி மூவி நிறுவனம் தான் அஜித்தின் 64வது படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், பூஜா ஹெக்டே மற்றும் நயன்தாரா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் இருப்பதால் இருவருமே ஒப்பந்தமாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்றும், திரைக்கதை அமைக்கும் பணியை கிட்டத்தட்ட ஆதிக் ரவிச்சந்திரன் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு டீசர்தான்… பெரிய தொகைக்கு முடிந்த ‘தலைவன் தலைவி’ ஓடிடி வியாபாரம்!