Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நெஞ்சம் மறப்பதில்லை’’ படம் குறித்து பிரபல இயக்குநர் கருத்து

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (19:29 IST)
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று வெளியாகியுள்ளது.
 
செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய என் ஜி கே படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.
 
இந்நிலையில் இப்போது செல்வராகவன் தனுஷ் நடிப்பில் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படம் அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்ட் 2 என்று சொல்லப்படுகிறது. செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களும் ரி ரிலீஸ் ஆகியுள்ளன. இப்போது ரசிகர்கள் மத்தியில் செல்வராகவனுக்கு இருக்கும் கிரேசை பயன்படுத்திக் கொண்டு அவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முயற்சியில் தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளாராம். பிரபல தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி வெளியிட உள்ளாராம். இதையடுத்து படத்தை மார்ச் 5 ஆம் தேதி வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று மாலை இணையத்தில் வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் 1 தற்போது யுடியூப்பில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்திட்டு சொல்லுங்க...சொன்னது சரிதானான்னு என்று பதிவிட்டிருந்தார்.  
 
இப்படத்தின் டீசரை இன்று பார்த்து வியந்த, கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா சார் செ3ல்வராகவனுடன் இணைந்துப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்து லவ் சிம்பள் பதிவிட்டுள்ளார்.
 
இந்தப் பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
 
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் நெஞ்சம் மறப்பதில்லை படமும் ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments