Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை

Advertiesment
விரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை
, வியாழன், 26 ஏப்ரல் 2018 (17:09 IST)
தமிழ் சினிமா உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர்,  பிரயமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன் ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது.  இதனால் அக்காள், அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். இதுநாள் வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார். மலையாள படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளா சென்ற கவுசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.
webdunia

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் திருமணம்  செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன். எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர்.  விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களை பற்றி நடிகருக்கு சொல்லி தரும் அனுஷ்கா!