Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை சிறுநீரகத் தொற்றால் மருத்துவமனையில் அனுமதி!

Advertiesment
shivanki joshi
, வெள்ளி, 17 மார்ச் 2023 (17:11 IST)
பிரபல நடிகை ஷிவாங்கி ஜோஷி சிறுநீரகத் தொற்று  நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜீ தொலைக்காட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கெல்தி ஹை ஜிந்தகி ஆங்க் மிச்சோலி என்ற தொட்ரில் நடிகையாக அறிமுகமானவர் சிவாங்கி ஜோஷி.

இத்தொடரை அடுத்து, பல தொடர்களிலும் வெப் சீரிஸிலும், ஓடிடியில் வெளியான அவர் ஓன் ஸ்கை என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்த நிலையில், சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’சிறு நீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதாக’’ அவர் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரை குணமடைந்து மீண்டும் நடிக்க வரவேண்டுமென்று அவரது  ரசிகர்கள் கடவுளிடம்  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 k கிட்ஸ்களின் க்ரஷ் ஹீரோயின் கிரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!