Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமண நிகழ்ச்சியின்போது புகைப்பிடித்த பிரபல நடிகை...ரசிகர்கள் விமர்சனம்

ananya pandey
, வியாழன், 16 மார்ச் 2023 (17:34 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் -2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே.  இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. இவர் அடுத்தடுத்து, பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த நிலையில், சமீபத்தில், அனன்யாவின் உறறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனன்யா, ஸ்டைலாக புகைப்பிடிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஒரு நிகழ்ச்சியின்போது சிகரெட் புகைப்பதற்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வரும் அனன்யா பாண்டே தற்போது, டிரீம் கேர்ள் என்ற படத்தில், ஆயுஸ்மான் குர்ரானாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கடந்தாண்டு இவர் விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த லைகர் படம் கலைவையான விமர்சனங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டிவி தீனா கட்டியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு - குவியும் வாழ்த்துக்கள்!