Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் பூ ராமு மாரடைப்பால் மரணம்

poo ramu
, திங்கள், 27 ஜூன் 2022 (20:20 IST)
தமிழ் சினிமாவில் பிரபல  நடிகர் பூ ராமு  இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் பூ ராமு. இப்படத்தை அடுத்து, சூரரைப் போற்று, நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். 

இன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!