Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகர் இயக்குநர், காலமானார்…ரசிகர்கள் , சினிமாதுறையினர் அதிர்ச்சி

Advertiesment
பிரபல நடிகர் இயக்குநர், காலமானார்…ரசிகர்கள் , சினிமாதுறையினர் அதிர்ச்சி
, சனி, 5 டிசம்பர் 2020 (17:17 IST)
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குநராகவும், நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் ஈரோடு சவுந்தர். அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் முன்னஈ இயக்குநர் மற்றும் சிறந்த வசன கர்த்தாவாக இருந்தவர் ஈரோடு சவுந்தர். இவர்  முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம், போன்ற ஹிட் படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றில் சேரன் பாண்டியன். நாட்டாமை படங்களின் வசனத்திற்காக தமிழக அரசின் விருது பெற்றவர்.

மேலும், ரஜினி, கமலுடனும் அவர் நடித்துள்ளார்.  சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோடு சவுந்த( 63) ர் இன்று சிகிச்சை பலனிறிக் காலமானார்.

அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.#erodesoundar #director  #actorpasswasy

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பாம்புக்கே அஞ்சுவதில்லை...சட்ட மன்றத் தேர்தலில்....சவால் விட்ட சிம்புவின் தந்தை !!!!