பிரபல நடிகர் ராம்சரண் தனக்கு சொந்தமான சிவன் கோவிலை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ரான் சரன். ராம் சரணும் தெலுங்கில் முன்னணி நடிகராவார். பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
ராம் சரண் மகா சிவராத்திரி அன்று , அவரது மனைவி உபாசனாவின் தாத்தா கட்டிய பழைய சிவன் கோவிலை சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோவை உபாசனா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர் ராமிற்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.