Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகா சிவராத்திரி: இரவு முழுவதும் கண் விழிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா...?

மகா சிவராத்திரி: இரவு முழுவதும் கண் விழிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா...?
சக்திக்கு ஒன்பது ராத்திரி. அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. சைவமக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம்  கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு  ஜாமத்திலும் பூஜை செய்தார்.
 
மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய - ஹர ஹர  மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை
 
மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் கடைபிடிப்பது மகா சிவராத்திரி எனப்படும். மஹா சிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா  லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம். 
 
மகா சிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும், இதில் பங்கேற்று இறைவனை வழிபட  பலன்கள் கிடைக்கும்.
 
சிவராத்திரி தினத்தன்று சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவ நாமத்தை ஜெபிக்க வேண்டும். சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூஜை வழிபாடுகளின் போது லிங்க தரிசனம் செய்தல் மற்றொரு 
 
கண் விழித்தால் புண்ணியம்: அறிந்தோ அறியாமலோ கூட ஒருவன் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைக்கும்.  மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ மற்றைய கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில்  கலந்துகொண்டும் தான தருமங்கள் செய்தும் சிவபெருமானின் புகழ் பாடியும் சிவபுண்ணியம் அடையலாம்.
 
முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார். ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை  மனைவியாக அமையப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் வழிபாடு செய்வது எவ்வாறு....?