மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் அவர் தமிழில் முதல் முதலாக கதாநாயகனாக மாரீசன் திரைப்படம் கடந்த மாத இறுதியில் ரிலீஸானது.
இந்த படத்தில் அவருடன் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள இயக்குனர் சுஜித் சங்கர் இயக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீஸுக்குப் பிறகு நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் வசூல் ரீதியாக இந்த படம் பெரிய வெற்றியை ஈட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் 22 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.