மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.
சமீபத்தில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஆவேஷம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. நேற்று ரிலீஸான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் அறியப்படும் நடிகராக இருக்கும் ஃபஹத் தற்போது இந்தி சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
கார் பிரியரான பஹத் இந்தியாவிலேயே இதுவரை யாரிடமும் இல்லாத புதிய வகை பெராரி காரை சுமார் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்த கார் இதுவரை இந்தியாவில் இன்னும் வேறு யாராலும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.