Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி, ரஞ்சித் தவிர யாரும் மரியாதை தரலை... ராதிகா ஆப்தே புகார்

Advertiesment
ரஜினி, ரஞ்சித் தவிர யாரும் மரியாதை தரலை... ராதிகா ஆப்தே புகார்
, சனி, 11 பிப்ரவரி 2017 (16:35 IST)
கபாலி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ராதிகா ஆப்தே தமிழ் கலைஞர்களை, மரியாதை அறியாதவர்கள் என  விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார்.

 
"தென் இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் மதிப்பு. அவர்களுக்குத்தான் நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு  கொடுப்பார்கள். நடிகைகளுக்கு சாதாரண ஓட்டல் ரூம்தான். நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்க  மாட்டார்கள். ஆனால் நடிகைகள் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அங்கு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இது மாதிரி  நிறைய வி‌ஷயங்கள் நடக்கும். இதனால் நான் பாதிப்பு அடைந்திருக்கிறேன்.
 
கபாலி படம் தவிர வேறு எந்த படத்திலும் தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை. ரஜினியும் கபாலி பட  இயக்குனர் ரஞ்சித்தும் மட்டுமே என்னை மதித்தார்கள். அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை. நான் நடித்த  படங்களில் பணியாற்றிய அனுபவங்களை வைத்தே இதை சொல்கிறேன்" என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
 
ராதிகா ஆப்தேயை வைத்து படம் இயக்கியவர்கள் யாராவது இதனை ஆட்சேபிக்கிறீர்களா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தப் பொண்ணுக்கு என்ன அதிகாரம்? - சசிகலாவை விளாசிய குஷ்பு