சசிகலா ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
"நடிகை குஷ்புவும் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
கடத்தப்பட்டது போல் 131 எம்.எல்.ஏக்களும் சொகுசு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். நான் அவர்களை பற்றித்தான் யோசிக்கிறேன். ஜனநாயகத்தில் இத்தகைய எம்.எல்.ஏக்களுக்கு மாண்பு ஏதாவது இருக்கிறதா? சிறையில் இருக்கும் குற்றவாளிகள் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துகிறார்கள். இப்படி அவர்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு (சசிகலா) என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று விளாசியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதுகுறித்து ஊடகங்கள் மௌனம் சாதிக்கும் நிலையில் துணிச்சலாக உண்மையை கறாராக பேசியளிருக்கிறார் குஷ்பு. நாலு பேர் இப்படி பேசினாலாவது ஜனநாயகத்தை சுதந்திரமாக்குவார்களா மன்னார்குடி மாஃபியாக்கள்?