Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்ட ஸ்டுடியோவைத் திறக்க முயற்சி!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (15:29 IST)
சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த செட்டுக்கு போலீசார் சீல் வைத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் மலையாள நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் பிக்பாஸில் கொரோனா வைரஸ் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரிய வந்ததை அடுத்து பிக்பாஸ் செட்டை மூடி சீல் வைத்தனர். மேலும் பிக்பாஸ் குழுவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து எப்படியாவது சீல் வைக்கப்பட்ட ஸ்டுடியோவை திறந்து விட வேண்டும் என முயற்சிகள் நடக்கிறதாம். ஏனென்றால் விரைவில் தமிழ் பிக்பாஸ் சீசன் மற்றும் பல படங்களின் படப்பிடிப்புகள் நடக்க உள்ளனவாம். அதற்குள் திறக்காவிட்டால் பெரும் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். மேலும் ஸ்டுடியோவை மூடக் காரணமாக இருந்த எண்டமோல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments