Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமாக வெளியாகும் மாநாடு படப் பாடல்… சாதனைப் படைக்குமா?

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (15:22 IST)
சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாகும் அறிவிப்பு என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் மற்றொரு அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனமே வாங்கியுள்ளதாம். இந்த படத்தின் முதல் பாடல் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த பாடலை வித்தியாசமாக வெளியிட உள்ளதாம் படக்குழு, எப்படி என்றால் சமீபகாலமாக பிரபலமாகி வரும் டிவிட்டர் ஸ்பேஸ் தளத்தில்தான் வெளியாக உள்ளதாம். அது சம்மந்தமாக இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்பு, யுவன், சுரேஷ் காமாட்சி மற்றும் கல்யாணி ஆகியோர் கலந்துகொள்ளும் உரையாடலும் இருக்கிறதாம். அதில் அவர்கள் பேசுவதை ரசிகர்கள் நேரடியாகக் கேட்கலாம். சமீபத்தில் தனுஷ் கலந்துகொண்ட ஸ்பேஸ் உரையாடலை 17000 பேர் கேட்டது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை மாநாடு படக்குழுவினரிடன் உரையாடல் தாண்டும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments