Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு வழியாக 240 திரைகளைக் கைப்பற்றிய எனிமி படத் தயாரிப்பாளர்!

ஒரு வழியாக 240 திரைகளைக் கைப்பற்றிய எனிமி படத் தயாரிப்பாளர்!
, திங்கள், 1 நவம்பர் 2021 (17:30 IST)
விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி திரைப்படம் அண்ணாத்த ரிலீஸ் ஆகும் நாளில் அதற்கு போட்டியாக ரிலிஸ் ஆகிறது.

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், விஷாலின் எனிமி படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது.ஆனால், எனிமி என்ற படத்திற்கு தியேட்டர்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை எனத் தயாரிப்பாளர் தெரிவித்துளார். இதற்கு அண்ணாத்த திரைப்படம்தான் காரணம் என அவர் காரணம் கூறினாலும், எனிமி திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வராததே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து படத்தின் நாயகர்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் தங்கள் நண்பரான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினர். அவர் உதவி செய்ததாக உறுதியளித்தார். இதையடுத்து இப்போது எனிமி படத்துக்கும் கணிசமான திரைகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இதுவரை சுமார் 242 திரைகள் கிடைத்துள்ளனவாம். மொத்தமாக 250 திரைகள் கிடைத்தால் போதும் என்று படக்குழு முடிவில் இருக்கிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் தோல்வி…. இந்திய அணியைக் கடுமையாக விமர்சனம் செய்த சரத்குமார்!