Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'எனிமி'யைப் புகழ்ந்து தள்ளிய விஷால்

'எனிமி'யைப் புகழ்ந்து தள்ளிய விஷால்
, சனி, 30 அக்டோபர் 2021 (14:59 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால்.இவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள படம் எனிமி.  இப்படத்தில் தனக்கு எதிரியாக நடித்துள்ள  ஆர்யாவைப் புகழ்ந்துள்ளார் விஷால்.
 

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், எனிமி படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பில், நடிகர் விஷால்  பேசியதாவது: இப்படத்தை ஓடிடியில் வெளியிட்டிருந்தால் நிறைய லாபம் அடைந்திருக்கலாம். ஆனால், இப்படத்தை  தியேட்டர்களில் தான் வெளியிடுவேன் என எனிமி படத் தயாரிப்பாளர் காத்திருந்தார். இப்படம் நன்றாக உருவாகியுள்ளது. இப்படம் என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும்,  இப்படத்தின் கதை என்னிடம் இயக்குநர் கூறியபோது, இப்படத்தில் ஆர்யா இருந்தால் நன்றாக இருக்கும் அவரது கதாப்பாத்திரத்தை  இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினேன். அதேபோல் சிறந்த திரைக்கதையுடன் இயக்குநர் வந்தார். ஆர்யா இப்படத்தின் சிறப்பாக நடித்திருக்கிறார் எனப் பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஆர் ஆர் ஆர்' படத்தின் புதிய அப்டேட் ! ரசிகர்கள் குஷி