Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனை நோக்கி பாயும் தோட்டாவை ஒரே நாளில் ஓட விட்ட தமிழ் ராக்கர்ஸ்!

எனை நோக்கி பாயும் தோட்டாவை ஒரே நாளில் ஓட விட்ட தமிழ் ராக்கர்ஸ்!
, வெள்ளி, 29 நவம்பர் 2019 (19:18 IST)
காதல் காவியங்களை தத்ரூபமாக இயக்கி ஆடியன்ஸை வியக்க வைக்கும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" பல வருடங்களுக்கு பின்னர் மிகுந்த எதிர்ப்பார்பிற்கிடையில் இன்று வெளியாகியுள்ளது. 
 
தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களது காதல் கெமிஸ்ட்ரி அவ்வளவு அற்புதமாக இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வார இறுதியில் நல்ல கலெக்ஷன் கிடைக்கும் என படக்குழு எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது சற்றுமுன் இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். 
 
பண பிரச்னையில் கடந்த 4 வருடங்களாக ரிலீஸ் தேதி தள்ளி போய் படம் வெளியாகுமா ஆகாதா என கிடப்பில் கிடந்து தற்போது தான் கடன் வாங்கி படத்தை ரிலீஸ் செய்துள்ளனர் படக்குழு. இப்படி வெளியான அதே நாளில் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு படக்குழுவினரை பெரும் கோபத்திற்குள்ளாகியுள்ளனர் தமிழ் ராக்கர்ஸ் . இதற்கு முன்னர்  தனுஷின் அசுரன், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை, விஜய்யின் பிகில் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தானத்துடன் ஜோடி சேரும் நடிகை!