’த்ரிஷ்யம் 2’ படம் குறித்த சூப்பர் தகவல்

புதன், 20 மே 2020 (11:17 IST)
’த்ரிஷ்யம் 2’ படம் குறித்த சூப்பர் தகவல்
மோகன்லால் மீனா நடித்த ’த்ரிஷ்யம் 2’திரைப்படம் உலக அளவில் ஹிட்டானது என்பதும் இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கியிருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் தயாரிப்பாளருக்கு 75 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும், தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் கமலஹாசன், கவுதமி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்துள்ளார் 
 
மீண்டும் மோகன்லால் மீனா நடிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் தொடங்கயிருப்பதாக ஜீத்து ஜோசப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜித்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால், த்ரிஷா நடிப்பில் ’ராம்’ என்ற படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க வேண்டி இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உருவாகிறது ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்: பாக்யராஜ் வேடத்தில் பிரபல நடிகர்