Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகாத்திகேயனின் ஹிட் பட இயக்குனரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? வெளியான தகவல்!

சிவகாத்திகேயனின் ஹிட் பட இயக்குனரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? வெளியான தகவல்!
, வியாழன், 14 ஜூலை 2022 (16:47 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படத்தையும் லைகா நிறுவனமே முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை படத்தின் ஹீரோ யார் என்பதை முடிவு செய்யவில்லை. டான் இமாலய வெற்றியால் மீண்டும் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் சிபி சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கி அதை திரைக்கதையாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்யே சிபி சக்ரவர்த்தியை அழைத்து டான் வெற்றிக்குப் பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தயாரிப்பாளர் ஐசரி. கணேசனின் தாயார் காலமானார்!