பரபல தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷின் தயாரின் தயார் இன்று காலமானார். சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர் ஐசரி கணேசன். இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு வெளியான படம் எங்க மாமா என்ற படத்தின் மூலம் அறிமுகமனார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவரது மகனும், பிரபல வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கே. கணேஷ். இவரும் சினிமாவில் பல படங்களில் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அத்துடன், எல்.கே.ஜி. மூக்குத்தி அம்மன், குட்டி ஸ்டோரி, வெந்து தணிந்ததது காடு போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். சிம்பு நடித்துள்ள வெ.த,காடு படம் விரைவில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஐசரி கணேசனின் துணைவியாரும், கே.கணேஷின் தாயாருமான திருமதி. புஷ்பா ஐசரி கணேசன் இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது75 ஆகும். சினிமாத்துறையினர், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.