Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் மீண்டும் அயர்ன் மேன்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (12:20 IST)
மார்வெலின் அடுத்த படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் அதில் மீண்டும் அயர்ன் மேன் கதாப்பாத்திரம் தோன்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வரும் மார்வெல் ஸ்டுடியோஸிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான மார்வெலின் ஸ்பைர்டர்மேன் நோ வே ஹோம் பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து வரும் மே மாதம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ் வெளியாக உள்ளது. மல்டிவெர்ஸ் கான்செப்டை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் புகழ்பெற்ற அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ் படத்தின் ட்ரெய்லர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியானது. ரசிகர்களிடையே பெரும் வைரலாகியுள்ள இந்த ட்ரெய்லரில் அயர்ன்மேன் போன்ற சூப்பர்ஹீரோ இடம்பெறும் காட்சி உள்ளது. அந்த கதாப்பாத்திரம் அயன்ர்மேன் சுப்ரீம் என ரசிகர்களிடையே யூகம் உள்ளது. இந்த படம் மே 6ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

தொண்டை கிழிய பாட்டு பாடும் ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments