Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் ஓடிடி ரிலீஸ்… எல்லோரையும் சுத்தலில் விடும் தயாரிப்பாளர்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (16:37 IST)
டாக்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து குழப்பமான தகவல்களை தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் குழப்பமான தகவல்களை தெரிவித்து வருகிறாராம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்போது கே ஜே ஆர் ராஜேஷ் மறுத்துள்ளாராம். விரைவில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளாராம்.

ஆனால் அவருக்கு நெருக்கமான வட்டாரம் அவர் ஹாட்ஸ்டாருக்கு படத்தை விற்றுவிட்டதாக அடித்துக் கூறுகிறதாம். எப்படியும் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகி விடும் என்றும் கூறுகிறதாம். கே ஜே ஆர் ராஜேஷே கூட முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments