Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா பரம்பரை ஓடிடி ரிலிஸ்… ஆர்யா மற்றும் ரஞ்சித்துக்கு கிடைத்த லாபம்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (16:33 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இப்போது வெளியாகி படத்தின் கதாபாத்திர அறிமுகங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

எல்லா பணிகளும் முடிந்து ரிலிஸுக்கு தயாரான நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் இந்த படத்தின் ரிலிஸ் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. முன்னணி நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் செலவில் உருவான படத்தை ஆர்யாவும் பா ரஞ்சித்தும் இணைந்துதான் தயாரித்தார்களாம். இப்போது ரூபாய் 8 கோடி ரூபாய் லாபம் வைத்து ஓடிடியில் விற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தொலைக்காட்சி உரிமம் மூலமாக மேலும் சில கோடிகள் அவர்களுக்கு கிடைக்கும் என்பதால் மொத்தமாக 13 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments