Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் 2 ஆண்டுகளில் சினிமா எங்கு இருக்கும் தெரியுமா ? ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை !

Advertiesment
இன்னும் 2 ஆண்டுகளில் சினிமா எங்கு இருக்கும் தெரியுமா ? ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை !
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (19:20 IST)
இன்னும் 2 ஆண்டுகளில் சினிமா எங்கு இருக்கும் தெரியுமா ? ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை
இன்று பெப்சி அமைப்பில் உள்ள முக்கியமான சங்கங்கள் கூடிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய செல்வமணி, இன்னும் இரண்டு ஆண்டுகள் சினிமா பையனூருக்கு மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
 
பையனூரில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத் தளம் உருவாக்கப்பட்ட வருகிறது. இங்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிலத்தில் பெப்சி தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில்,  செல்வமணி கூறியதாவது :
 
பையனூரில் அரசு வழங்கியுள்ள நிலத்தில், 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடியும். முதல்கட்டமாக 1000 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட இருக்கிறொம். அனைத்து நடிகர்கள், தொழிற்சாலைகள் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் அமைத்து திரைப்பட நகரமாக்க முடிவு செய்துள்ளோம். அதன் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதனால், இன்னும் இரண்டு ஆண்டுகள் சினிமா பையனூருக்கு மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலியனுடன் லாலி பாப் சாப்பிடும் சிவகார்த்திகேயன் - அயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ...!