பிக் பாஸ் நிகழ்ச்சியில் லக்ஜுரி பட்ஜெட் டாஸ்கின் படி ஓவியா மற்றும் காயத்ரி ஆகியோரை பிக்பாஸ் அழைத்து மற்ற ரிப்போர்டராக மாறி போட்டியாளர்களை அழைத்து அவர்கள் மனதில் உள்ள உண்மை கருத்தை வெளிப்படுத்தும் விதமாக பேட்டியெடுக்கும்படி தெரிவித்தார்.
இந்நிலையில் ஓவியா, காயத்ரி ஒவ்வொரு போட்டியாளர்களிடமும், ஓவியா தன் மீது ஏதேனும் பிரச்னை உள்ளதா? மனஸ்தாபம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக கேள்வியை கேட்டார். அதே போல காயத்ரி, ஓவியா, ஜூலி விவகாரத்தில் என் மீதான பார்வை எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொண்டார்.
இந்த பேட்டியின் முடிவில் காயத்ரி குறித்து ஓவியாவும், ஓவியா குறித்து காயத்ரியும் தாங்கள் நினைக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதோடு, இருவரும் ஒன்று சேர்ந்தனர். எல்லா போட்டியாளர்களிடமும் பேட்டியை முடித்தவுடன் ரைசா, ஜூலி, காயத்ரி மூவரும் தனியாக அமர்ந்திருந்தபோது, ஜூலி விளையாட்டாக காயத்ரியை கேள்வி(பேட்டி) கேட்கிறார். அதில் இந்த பிக்பாஸ் விட்டிலேயே உங்களுக்கு பிடிக்காத வேலைன்னு எதை சொல்லுவிங்க என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த காயத்ரி பிடிக்காத வேலைன்னா அது ஓவியாவைப் பற்றி ரொம்ப நேரம் பேசியதுதான் என்றார்.
காயத்ரி, ஓவியா இருவரும் ஒன்றாக இணைந்த நிலையில், காயத்ரி இப்படி கூறி இருப்பது நல்லவிதமாக எடுத்து கொள்வதா அல்லது ஓவியாவைப் பற்றி இதுநாள் வரை தப்பாக பேசி வந்ததை குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. காயத்ரி விளக்கம் தந்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும்.