Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக் பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ இல்லை: கணேஷ் வெங்கட்ராம் மனைவி சர்ச்சை பேச்சு!

பிக் பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ இல்லை: கணேஷ் வெங்கட்ராம் மனைவி சர்ச்சை பேச்சு!

Advertiesment
பிக் பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ இல்லை: கணேஷ் வெங்கட்ராம் மனைவி சர்ச்சை பேச்சு!
, வியாழன், 27 ஜூலை 2017 (11:32 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவே இல்லை என அதில் கலந்துகொண்டுள்ள கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கூறியுள்ளார்.


 
 
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிக் பாஸ் நிகழ்சியில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். யார் வம்புக்கும் போவதில்லை. ஆனலும் அவர் மீது வைக்கப்படும் ஒரே குற்றச்சாட்டு உணவு பிரச்சனை தான். நடிகர் வையாபுரி பலமுறை கணேஷை இதுகுறித்து விமர்சித்துள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து அவரது மனைவியும் நடிகையுமான நிஷாவிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கணேஷ் நேர்மையானவர், மற்றவர்களுக்கு மதிப்பளிப்பவர் என கூறுவதை கேட்கும் போது ஒரு மனைவியாக எனக்கு சந்தோஷம்.
 
அவர் மனைவியாக அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். என்ன தான் இருந்தாலும் ஒருவர் சாப்பிடுவதை குறை சொல்வது தவறு. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ இல்லை. இது ஒரு மெகா சீரியல் என்றே கூறவேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைகளை பயன்படுத்தாமல் தண்டால் எடுத்து அசத்திய பாலிவுட் நடிகை