Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடிடியில் சிறிய படங்களை ரிலீஸ் செய்யமுடியவில்லை… இயக்குனர் பா ரஞ்சித் புலம்பல்!

ஓடிடியில் சிறிய படங்களை ரிலீஸ் செய்யமுடியவில்லை… இயக்குனர் பா ரஞ்சித் புலம்பல்!
, திங்கள், 30 ஜனவரி 2023 (10:18 IST)
இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் பொம்மைநாயகி என்ற படமும் உள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷான் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் பா ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “சிறிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யமுடியவில்லை. ஒரு வருடத்துக்கு 12 படங்களை அவர்கள் ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அது அனைத்துமே பெரிய நடிகர்களின் படங்களாகவே இருக்கின்றன. இந்த நிலையில்தான் பொம்மை நாயகி படத்தை திரையரங்குகளுக்கு கொண்டுவருகிறோம். அந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கைதான் எங்களை இந்த முடிவுக்கு கொண்டுவந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!