இயக்குனர் வசந்த் சாய் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில காதல் கதைகளும் என்ற படம் அடுத்தமாதம் சோனி லைவ்வில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் மூன்று காதல் என்ற பெயரில் மூன்று காதல் கதைகளை இயக்கினார் வஸந்த். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. இந்நிலையில் மீண்டும் அதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிவரஞ்சனியும் இன்னும் சில காதல் கதைகளும் என்ற படத்தை எழுத்தாளர்கள் ஆதவன், அசோகமித்ரன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் கதைகளை தழுவி இயக்கினார். இந்த படம் எடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.