வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், அழகர் குதிரை, ஜீனியஸ் உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சி சென்ற இயக்குநர் சுசீந்திரன் மீது வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள Orthomed hospitalலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு மருத்துமனையில் கையில் கட்டு போட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அளித்து வருகின்றனர். அத்துடன் அவர் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். அவர் மருதவாமையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இதனை உறுதி செய்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்குன்றனர்.