Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருண் விஜய் - பிரசன்னா போட்டிபோட்டு நடித்துள்ள "மாஃபிய" ரிலீஸ் தேதி இதோ!

Advertiesment
அருண் விஜய் - பிரசன்னா போட்டிபோட்டு நடித்துள்ள
, வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:03 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் 
 
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பியவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அதனை தொடர்ந்து அரவிந்த் சுவாமியை ஹீரோவாக வைத்து நரகாசுரன் படத்தை இயக்கினார். ஆனால் ஒரு சில காரணத்தால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
 
இதற்கிடையில் அருண் விஜய்யை வைத்து மாஃபியா படத்தை இயக்கி வருகிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசரை பார்த்துவிட்டு கார்த்திக் நரேனையும் படக்குழுவினரையும் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் என மூவரும் துடிப்பான ஆக்ஷன் காட்சிகளில் வெறித்தனமாக போட்டிபோட்டு நடித்துள்ள இப்படத்தின் டீசர் 2வும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் வருகிற பிப்ரவரி 21ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது என்று தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லையென்றாலும் இன்று மாலை 5 மணிக்கு படக்குழுவினரால் அறிவிக்கப்படும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!