Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்மாவத் படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

பத்மாவத் படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (11:17 IST)
பல தடைகளை கடந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவானது பத்மாவதி திரைப்படம், பத்மாவத் என்ற பெயரோடு கடந்த 24ஆம் தேதி வெளியானது. பத்மாவத் ராஜ்புத் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பத்மாவத் திரைப்படத்தை வெளியிட கூடாது என பல இடங்களில் போராட்டங்களும், கலவரங்களும் நடைப்பெற்றன.
இந்நிலையில் பாலிவுட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமான பத்மாவத் திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. பல இடங்களில் படத்திற்கு எதிராக கலவரம் நடந்தாலும், படத்தை பாராட்டி பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர்களின் பட்டியலில் உள்ள ஷங்கர் தற்போது பத்மாவத் படத்தை பார்த்துவிட்டு அது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 'அற்புதமான காட்சியமைப்பு' என ஷங்கர் பத்மாவதியை பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடேங்கப்பா விஜய் சேதுபதி கைவசம் இத்தன படம் இருக்கா!!