Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லை தாண்டாமல் இருக்க மீனவர்களுக்கு புதிய கருவி: இஸ்ரோ சிவன்

Advertiesment
எல்லை தாண்டாமல் இருக்க மீனவர்களுக்கு புதிய கருவி: இஸ்ரோ சிவன்
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (00:27 IST)
சமீபத்தில் இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்ற தமிழரான சிவன், அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது நீண்டகாலமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதும், இலங்கை படையினர்களால் கைது செய்யப்படுவதுமாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட எல்லையை கண்டறியும் புதிய கருவி தயாரிக்கப்பட்டு மீனவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து கைதாகும் பிரச்சனையிலிருந்து விடுபட நாவிக் (Navig) என்ற புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த கருவியின் மூலம் மீனவர்கள் தாங்கள் கடந்து கொண்டிருக்கும் பாதை, வானிலை மாற்றங்கள் ஆகியவற்றை தெளிவாக அறிய முடியும் என்றும் கூறினார்.

மேலும் இன்னும் ஒருசில மாதங்களில் ஜி-சேட் 11 செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வராமலே தொலைவிலிருந்து மருத்துவம் பார்க்க முடியும் என்றும், தொலைதூர கல்வி பயிலவும் முடியும் என்று தெரிவித்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களை பார்த்து விசில் அடித்தால் ரூ.27 ஆயிரம் அபராதம்: