Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல மாதங்களாக சம்பளம் கொடுக்காத லைகா… கடைசியில் கைகொடுத்த ஷங்கர்!

Advertiesment
பல மாதங்களாக சம்பளம் கொடுக்காத லைகா… கடைசியில் கைகொடுத்த ஷங்கர்!
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:08 IST)
இந்தியன் 2 படத்தில் பணியாற்றி வரும் உதவி இயக்குனர்களுக்கு லைகா சம்பளம் கொடுப்பதை நிறுத்தியுள்ளதாம்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’ இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கும் முன்னரே இந்த படம் டிராப் ஆனது என்று ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் அதன் பின்னர் பல தடைகளை மீறி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ஆனாலும் பல தடங்கல்களால் படப்பிடிப்பு நின்று நின்று நடந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து ஒன்றினால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதிலிருந்து 8 மாதங்களாக படப்பிடிப்பு நடக்காமல் உள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்காக மாத சம்பளத்துக்கு பணியமர்த்தப்பட்ட உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கவில்லையாம். இதனால் அவர்கள் மிகுந்த பொருளாதார சிரமத்துக்கு ஆளாக, இப்போது இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தானே சம்பளம் கொடுத்து வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுக்கு ஹீரோயினாகும் அக்கட தேசத்து நடிகை… இதற்கு முன் நடித்த படம் என்ன தெரியுமா?