Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவன் ஷங்கர் ராஜாவிடம் இருந்து விலகுகிறாரா இயக்குனர் ராம்?... புது இசையமைப்பாளரோடு கூட்டணி!

vinoth
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:02 IST)
இயக்குனர் ராம், நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரிமியர் ஆகவுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. கோயம்புத்தூரில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக இயக்குனர் ராம் தன்னுடைய அனைத்துப் படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜாவைதான் இசையமைக்க வைப்பார். ஆனால் மிர்ச்சி சிவா படத்துக்கு முதல் முறையாக ஒரு புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக யுவன் அளிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களைக் கவர்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் இப்போது அவரின் ஆஸ்தான இயக்குனர்கள் அவரை விட்டுப் பிரிவது அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்  விதமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"தில் ராஜா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது… லாபட்டா லேடீஸ் தயாரிப்பாளர் அமீர்கான் மகிழ்ச்சி!

என்கவுண்ட்டருக்கு ஆதரவான படமா ரஜினியின் ‘வேட்டையன்’… டிரைலர் கிளப்பிய சர்ச்சை!

ஆள் அடையாளமே தெரியல… கரகாட்டகாரன் கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments