Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மம்மூட்டி ஜோதிகா நடிக்கும் ‘காதல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

மம்மூட்டி ஜோதிகா நடிக்கும் ‘காதல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!
, ஞாயிறு, 13 நவம்பர் 2022 (09:06 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.

இநிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சூர்யா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரல் ஆகின. இந்நிலையில் இப்போது மம்மூட்டி மற்றும் ஜோதிகா இடம்பெற்றுள்ள படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பரில் திரையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்… லேட்டஸ்ட் அப்டேட்!