Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

vinoth
வியாழன், 26 ஜூன் 2025 (14:06 IST)
8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றும், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தும் அடுத்த படத்தை அவர் இயக்கி முடிக்க  5 ஆண்டுகள் ஆனது. அதர்வாவை வைத்து அவர் இயக்கி வெளியிட்ட குருதி ஆட்டம் திரைப்படம் ரிலீஸாகி படுதோல்விப் படமாக அமைந்தது.

இதனால் அவர் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது ‘3BHK’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் கலந்து கொண்டு பேசியது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “என்னுடைய முதல் படம் ரிலீஸான பின்னர் என்னை அழைத்துப் பேசிய ஒரே ஹீரோ சித்தார்த்தான். சித்தார்த்தைப் பற்றி ஒரு பிம்பம் உள்ளது. அவர் அதிகம் பேசக் கூடியவர், பக்க விளைவுகளைப் பற்றி யோசிக்காதவர், அகங்காரம் பிடித்தவர் என்று. ஆனால் நான் சொல்கிறேன், சித்தார்த் ஒரு அடிமுட்டாள். நான் எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால் சித்தார்த் ஒரு வளர்ந்த குழந்தை. என்னைப் போல.” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

கிளாமர் உடையில் மலைபிரதேசத்தில் ஹூமா குரேஷியின் ஜாலி மோட் போட்டோஷூட்!

அடுத்த மைல்கல்… வசூலில் உச்சத்தைத் தொட்ட விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்த சல்மான் கான்!

எனக்கு சிந்தனை தடைபடும்போது சாட் ஜிபிடி-யின் உதவியை நாடுவேன்: அனிருத்

அடுத்த கட்டுரையில்
Show comments