இயக்குனர் பிரவீன் காந்தி அஜித்தை இயக்கும் வாய்ப்பு நழுவிப் போனது பற்றி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரவீன் காந்தியின் அறிமுகமே ரட்சகன் எனும் பிரம்மாண்ட படத்தோடு தொடங்கியது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் பிரசாந்த், சிம்ரனை வைத்து ஜோடி படத்தை இயக்கினார். அதன் பின்னர் அஜித்துக்கு கதை சொல்லி எல்லாம் தயாராகி ஷூட்டுக்கு தயாரான நிலையில் அஜித் அவரை மாற்றிவிட்டு ஏ ஆர் முருகதாஸை இயக்குனராக்கி விட்டாராம். பிரவீன் காந்தியின் உதவி இயக்குனர்தான் முருகதாஸ் என்பதால் அவரும் எதுவும் கேட்கவில்லையாம்.
அப்படி முருகதாஸ் இயக்கிய படம்தான் தீனா. அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சம்பவத்த்தை இயக்குனர் பிரவீன்காந்தி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.